Homeசினிமாவெளிவரவில்லை ‘சார் மேடம்’: தெலுங்கு ரசிகர்கள் குழப்பத்தில்!

வெளிவரவில்லை ‘சார் மேடம்’: தெலுங்கு ரசிகர்கள் குழப்பத்தில்!

Published on

spot_img

பாண்டிராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணனின் இசையில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ திரைப்படம் (ஜூலை 25) தமிழில் வெளியாகியுள்ளது. படக்குழு வெளியிட்ட தகவலின்படி, இப்படத்தின் தமிழ்ப் பதிப்பு உலகம் முழுவதும் சுமார் 1000 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், இதே படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘சார் மேடம்’ இன்று வெளியாக வேண்டியிருந்தாலும், எந்தவிதமான வெளியீடு நிகழவில்லை. மேலும், ஆன்லைனில் முன்பதிவு வசதியும் திறக்கப்படாதது தெலுங்கு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பு தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான விளக்கமோ, அறிவிப்போ வெளியிடப்படவில்லை.

பவன் கல்யாண் நடித்து (ஜூலை 24) வெளியான ‘ஹரி ஹர வீர மல்லு’ திரைப்படத்தின் தாக்கத்தை தவிர்க்கவே, ‘சார் மேடம்’ பட வெளியீட்டை கடைசி நேரத்தில் இழுத்துவைத்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கும் நித்யா மேனனுக்கும் தெலுங்கு ரசிகர்கள் ஏராளம் என்றாலும், இப்படம் வெளியாகாமல் இருந்தது ஆச்சரியமாகும்.

இப்போது, ‘சார் மேடம்’ அடுத்த வாரம் வருமா, இல்லையா? அல்லது இன்னும் தள்ளிப் போகுமா? என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

Latest articles

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் — 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

இந்தியா முழுதும் காணப்படும் முக்கிய வேதாந்தக் கோயில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் இன்று (ஞாயிற்றுக்‌கிழமை மற்றும் அரசு...

திருவண்ணாமலை மகா தீப மலையில் பிளாஸ்டிக் குப்பை அகற்றம்..!

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் மகா தீப மலைப் பகுதியில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் குப்பை...

கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில்

சமீபத்தில் சமையல் ஆர்வலர்கள் மத்தியில் ‘கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ தயாரிக்கும் எளிய ரெசிபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா நிறைவாக – சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி

திருவண்ணாமலையில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா இன்று சிறப்பாக நிறைவடைந்தது. விழாவின் இறுதி நாளை முன்னிட்டு கோவில் வளாகத்தில்...

More like this