வீட்டிலேயே ருசியான சில்லி சிக்கன் செய்வது எளிது. இதோ எளிய செய்முறை 👇
தேவையான பொருட்கள்:
- சிக்கன் – 500 கிராம் (சின்ன துண்டுகளாக வெட்டியது)
- மிளகாய் சாஸ் – 2 டீஸ்பூன்
- சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
- தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன்
- மைதா – 2 டீஸ்பூன்
- கார்ன் ப்ளவர் – 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4 (நீளவாக்கில் வெட்டியது)
- பெரிய வெங்காயம் – 2 (சதுரமாக வெட்டியது)
- காப்ப்ஸிகம் – 1 (சதுரமாக வெட்டியது)
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரிக்க
செய்வது எப்படி:
1️⃣ சிக்கன் துண்டுகளை மைதா, கார்ன் ப்ளவர், உப்பு, சிறிது சோயா சாஸ் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2️⃣ அதை சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும்.
3️⃣ வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம், காப்ப்ஸிகம் சேர்த்து வதக்கவும்.
4️⃣ பின்னர் மிளகாய் சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து கிளறவும்.
5️⃣ இறுதியாக பொரித்த சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து, சிறிது தண்ணீர் விட்டு 2 நிமிடம் கிளறவும்.
🔥 ருசியான ஹோட்டல் ஸ்டைல் சில்லி சிக்கன் தயார்! 🍴



