சமீபத்தில் சமையல் ஆர்வலர்கள் மத்தியில் ‘கிரிஸ்பி பொட்டேட்டோ வெட்ஜஸ்’ தயாரிக்கும் எளிய ரெசிபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியில் மொறு மொறு, உள்ளே மென்மையாக இருக்கும் இந்த ஸ்னாக்ஸ், ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் என்பதால், இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உருளைக்கிழங்கை வெட்ஜஸ் வடிவில் நறுக்கி, லேசாக அரை வேகவைத்து, கார்ன் பிளவர்–மைதா–மசாலா கலவையில் பொரித்தால், தங்க நிறத்தில் கிரிஸ்பியாக மாறும் என உணவுப் ப்லாக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வீட்டில் இருக்கும் எளிய பொருட்களாலும், குறைந்த செலவில் தயாரிக்கலாம் என்பதால், பலரும் இந்த ரெசிபியை முயற்சித்து புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
மாலை நேர ஸ்நாக்ஸாகவும், குழந்தைகளின் லஞ்ச்பாக்ஸிலும் இது சிறந்த தேர்வாக மாறியுள்ளது.


