Exclusive content
புதுச்சேரி:
பக்தர்கள் மற்றும் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு புதிய இரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை வாரத்தில் மூன்று நாட்கள் – ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்படும்.
இரவில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து 9.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அடையும். இந்த சேவை தற்போது நிரந்தரமாக அமையப்பெற்றுள்ளது.
இந்த எக்ஸ்பிரஸ் ரயில்,
மும்பை கல்யாண் நிலையத்தில் இருந்து புறப்பட்டு,
பெங்களூர், ஜோலர்பேட்டை, காட்பாடி, புதுச்சேரி ஆகிய வழித்தடங்களை கடந்து
திருவண்ணாமலையில் நிறைகிறது.
பயணிகள் IRCTC இணையதளம் மற்றும் பிற ஆன்லைன் சேவைகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். நேர்த்தியான பயண வசதியை ஏற்படுத்தும் இந்த ரயில் சேவை, அருள்மிகு அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையாக திகழ்கிறது.



